Thursday, August 6, 2009
நண்பர்கள்(வினோ) தினம்.
நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் இந்த பதிவையிடுவது சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நட்பு என்றாலே என் நினைவில் இருப்பது வினோதான்.வினோ என்று அழைக்கப்பட்ட வினோதா எனது தோழி.வினோவை தோழி என்று சொல்வதை விட என் மனசாட்சி என்று கூறலாம்.நட்பின் உன்னதத்தை எனக்கு காட்டியவள்.ஆண்,பெண் நட்பு என்றால் அது ஒரு எல்லை இருக்கும் என்று சொல்வார்கள்.ஆனால் நட்பு நண்பர்கள் என்று ஆன பிறகு ஆணென்ன பெண்ணென்ன என்று இருந்தவள் என் வினோ.ஆவலுடன் நான் பழகியது இரண்டு ஆண்டுகள்தான்.ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகள் அவள் என்னுடன் இருந்ததை போன்று நான் உணர்ந்தேன்.எந்த வரையறைக்குள்ளும் சிக்காதவள் வினோ.பழகிய கொஞ்ச நாட்களிலேயே மனதின் அடி ஆழம் வரை சென்று சிம்மாசனமிட்டு அமர்ந்தவள்.அப்படிப்பட்ட ஒரு நட்பு கிடைக்க பல தவங்கள் செய்திருக்கவேண்டும்,பல வரங்கள் வாங்கி வந்திருக்க வேண்டும்.ஆனால் நான் செய்த தவங்களிலும்,வாங்கி வந்த வரத்திலும் ஏதோ ஒரு தவறு இருந்து இருக்கிறது இல்லையென்றால் இரண்டு வருடங்களிலேயே அவள் மீண்டும் வர முடியாத இடத்திற்கு செல்வாளா?அவள் என்னுடன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் நான் மகிழ்ச்சியாக மட்டுமே இருந்து இருக்கிறேன்.அவளால் எனக்கு எல்லாம் கிடைத்தது.என் கண்ணீரையும் புன்னகையாக மாற்றியவள்.அவள் மறைந்தாலும் அவள் நினைவுகள் என்றும் மறையாது.அவள் இன்று உடலளவில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இன்றும் அவள் என்னுடன் இருக்கிறாள் நான் சுவாசிக்கும் காற்றாக.என் உயிருள்ளவரையிலும் அவள் என்னுடனே கலந்திருப்பாள்இந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் பொழுது நண்பர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கமாக உள்ளது.அவளுக்கு என்ன கொடுப்பது?எந்த பொருளும் அவள் அன்புக்கு இணை இல்லை.அவளுக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை என் நட்பையும் அவளை இழந்ததால் வந்த கண்ணீர் துளிகளையும் தவிர.....................
Subscribe to:
Comments (Atom)