Tuesday, January 6, 2009
அப்ப நான் 8ஆம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்.அப்பதான் நீச்சல் கத்துக்கிட்ட புதுசு.கிணத்துல குளிக்கலாம்னு நானும்,என் நண்பர்கள் 5 பேரும் போனோம்.அப்ப எல்லாம் எங்களுக்குள்ல ஒரு விளையாட்டு இருக்கும்.என்னனா தண்ணிக்குள்ளேயே போய் இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கத்துக்கு போய் கிணற்றோட மறுசுவர தொட்டுடு வரணும்.யாரு அதிக தடவை தொட்டுட்டு வராங்களோ அவங்கதான் வெற்றிபெற்றவங்க.நானும் என் நண்பணும் குதிச்சு தண்ணிக்குள்ளேயே போனோம்.சுவரை தொட்டு தண்ணிக்குள்ளே இருந்து மேலே வந்து பார்க்குறோம்.ஓடையில்(அதாவது கிணற்றின் பக்க சுவர்கள்)ஒரு பாம்பு தலைய தூக்கிக்கிட்டு நிக்கிது .ஒரு நிமிடம் என்ன பண்ணுறதுனே தெரியலை.தண்ணி பாம்பு இல்லைங்க.நல்லபாம்பு(நல்லபாம்புதேனே பேசிட்டு வர வேண்டியதுதானேனு மொக்கைய போடாதீங்க ).அடுத்த நிமிடம் மறுபடியும் தண்ணிக்குள்ள முங்கி இந்த பக்கம் வந்து படில ஏறி ஓடுனோம் பாருங்க வீட்டுக்கு போய்தான் ஓட்டத்த நிறுத்தினோம்.அப்புறம் 1 வாரத்துக்கு யாரும் கிணத்து பக்கம் போகவே இல்லையே.இன்னைக்கும் எந்த கிணற்றை பார்த்தாலும் அந்த நியாபகம்தான் வரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment