இப்ப நான் இடும் இந்த பதிவு என் பள்ளி நாட்களில் நடந்தது.அப்பொழுது அதன் அர்த்தம் புரியவில்லை.இன்று அதை நினைத்து பார்க்கும் பொழுது எவ்வளவு பசுமையான நாட்கள் என்றும்,அந்த பள்ளி நட்பும் கண்களில் சிறிது நீரை உருவாக்குகிறது.அப்ப நான் 6ஆம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்.இப்ப வரைக்கும் அதை முடிச்சுடியானு நீங்க கேட்பது எனக்கும் கேட்குது.இருந்தாலும் படிங்க இத.நான் படிச்சது கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி(இப்ப அது மேல்நிலை பள்ளி).அதுனால பாதி நேரம் மைதானத்திலும்,பாதி நேரம் வகுப்பறையிலும் இருப்போம்.பள்ளிக்கு பக்கத்திலேயே நண்பணின் தோட்டம்.அங்கு நெல்லிக்காய் மரம் இருந்தது.வகுப்பு இல்லைனா நாங்க எல்லாம் அங்க போய்ருவோம்.நண்பனின் அப்பா ரொம்ப நல்லவர்.பிள்ளைங்க சாப்பிட்டது போக மிச்சம் இருப்பதுதான் விற்பனைக்குனு சொல்லிருவார்.அதுனால நம்ம ராஜ்ஜியம்தான்.பள்ளியில் அப்பொழுது புதிதாக மரக்கன்றுகள் நட்டு இருந்தார்கள்.வகுப்புகள் இல்லாத நேரத்துல அந்த மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்பது தலைமையாசிரியரின் உத்தரவு.நாங்களும் நீர் ஊற்ற கிளம்பினோம்.அப்பதான் விதி என் நண்பணின் வடிவில் எங்களை பார்த்து சிரித்தது.அவன் எங்களை எல்லாம் வாங்கடா போய் இளநீர் குடிச்சுட்டு,நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்னு கூப்பிட்டான்.ஆசிரியரிமேல் பயம் இருந்தாலும் அதை மீறி அவன் தோட்டத்து இளநீர் ருசியும்,நெல்லிக்காயும் எங்களை அவன் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றது.ஆனா மத்த பசங்க எல்லாம் ரொம்ப நல்லவிங்க.மரக்கன்றுகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தாங்க.நாங்க அந்த வகுப்பு நேரம் முடியறதுக்குள்ள வந்து விடலாம் என்று நினைத்து கிளப்பி விட்டோம்.நாங்கள் என்று சொல்வது எங்கள் நண்பர்கள் குழுவை.நாங்கள் 5 பேர்.எங்க போனாலும் ஒன்றாகத்தான் செல்வோம்.நாங்க சரியான நேரத்துக்கு வந்துட்டோம்.ஆனால் எங்க கெட்ட நேரம் தலைமையாசிரியார் எங்கள் மற்ற நண்பர்களின் வேகத்தை பார்த்துவிட்டு அனைவரையும் வகுப்பறைக்கு செல்லும்படி கூறிவிட்டு பாரட்டுவதற்காக வகுப்பறைக்கு வந்துவிட்டார்.வந்து வருகைப்பதிவேடை பார்க்கையில் நாங்க இல்லைங்கறத கண்டுபிடிச்சுட்டார்.நாங்க வந்ததும் விசாரணை ஆரம்பிச்சுச்சு.தலைமையாசிரியார் ரொம்ப இதமா கேட்டார்.எங்க போய்ட்டு வறீங்க,யாரு கூட்டிட்டு போனதுனு.யாரும் வாயை திறக்கலை.நண்பனை மாட்டி விட முடியுமா?அமைதியா இருந்தோம்.எங்களை கூட்டிட்டு போன நண்பணே சொல்ல வந்தப்பவும் நாங்க சொல்ல விடலை
அவரும் பொறுமையா கேட்டு பார்த்தார்.நாங்க சொல்லலை.பக்கத்துல இருந்த குச்சிய எடுத்தார்.எடுத்தவர் குச்சி சின்ன,சின்ன தூளா போறவரைக்கும் விடலை.அடி பின்ன்னி எடுத்துட்டார்.ஆனாலும் நாங்க சொல்லலை.அவரே கடைசில ஆச்சரியம் தாங்க முடியாம உங்க நண்பனை காட்டி கொடுக்க மாட்டீங்களாக்கும் அப்டினு கேட்டாரு.அதுக்கும் வாயைதிறக்கலை.உங்க ஒற்றுமைய இந்த மாதிரி விசயங்களில் காமிக்காதீங்கடா நல்ல விசயங்களில் காமிங்கனு சொன்னார்.இதுல என்ன விசயம்னா அது வரைக்கும் நான் எந்த ஒரு ஆசிரியரிடமும் அடி வாங்கியது கிடையாது.அதுதான் முதல் முறை.அடி வாங்கியது வலித்தாலும் நண்பனை காட்டிக் கொடுக்கவில்லை என்ற பெருமிதம் இருந்தது.நாங்கள் அனைவரும் இன்று பார்க்கும்பொழுது கூட இந்த நியாபகங்கள்தான் வரும்.என்றும் என் நினைவில் நிற்கும் விசயமிது.
No comments:
Post a Comment