Wednesday, January 7, 2009
கல்லூரியில் படிக்கும்போது நடைபெற்ற சம்பவம்தான் இதுவும்.பொதுவா கல்லூரியில் நான் ரொம்ப நல்லா பையன் அப்டின்னு பேர் உண்டு.எல்லாம் ஒரு படம்தான்..நம்மளோட அட்டகாசம் எல்லாம் கல்லூரிக்கு வெளியேதான்.என் நெருங்கிய நண்பன் ஒருத்தன் இருந்தான்.அவனுக்கு என்னை யாரவது நல்லா பையன்னு சொல்லிட்டா போதும்,ஏன்டா உன்னை நல்லவன்னு இன்னுமா இந்த உலகம் நம்புதுனு கேட்பான்.ஏனென்றால் நம்ம ரகசியம் எல்லாம் அவனுக்குதானே தெரியும்.இந்த சூழ்நிலையில ஒருநாள் ஜூனியர்ஸ் எல்லாம் அப்பத்தான் வந்து இருந்தாங்க.நான் நூலகத்துக்கு போய்ட்டு வந்துடு இருந்தேன்.அப்ப படியில ஒரு பொண்ணு இறங்கி போனாங்க,அவங்கள பார்த்தா என்கூட 10வது படிச்ச பொண்ணு மாதிரியே இருந்தது.உடனே வேகமா ஓடி போய் பாத்தேன்.அதுக்குள்ள அவங்க படில இருந்து இறங்கி போயிட்டு இருந்தாங்க.படி வந்து "L" வடிவத்துல இருக்கும்.4அடி ஆழம் அப்புறம் அங்க ஒரு வளைவு,மறுபடியும் 4அடி ஆழம்.நான் இந்த இரண்டு இடத்துலயும் ஒரு ஜம்ப் பண்ணிட்டேன்.என்ன ஒரு கொடுமைனா நான் LAND ஆன இடம் இயற்பியல் துறையின் ஓய்விடம்.அங்க ஒரு மேடம் இருந்தாங்க.நான் சரியாக குதிச்சபோது அவங்க அறைய விட்டு வெளியே வந்தாங்க.ஒரு நிமிடம் அதிர்ந்து போய் பார்த்துட்டு என்ன ஆச்சுனாங்க,நான் ஹிஹி ஒன்னும் இல்லை மேடம்னு சொன்னேன்.ஆனா என் கெட்ட நேரம் உச்சத்துல நின்னு இருக்கறது எனக்கு தெரியாம போச்சு.நான் அந்த பொண்ணை பார்த்துட்டு குதிச்சத அந்த மேடம் பார்த்துடாங்க.நல்லவன்னு நெனச்சேன் நீயுமானு கேட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்ட ஆரம்பிச்சுடாங்க.இதுல என்ன கொடுமைனா நான் தேடி போன பொண்ணு என் தோழியே இல்லை..அதுல இருந்து அந்த மேடம் என்ன பார்த்தாங்கனா போதும் அரவிந்தன் குதிக்க இடம் தேடுரிங்கலானு கேட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்ட ஆரம்பிச்சுருவாங்க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment