Tuesday, January 6, 2009
ஒரு தம்ளர் பீர்.
நான் கல்லூரியில் படிக்கும்போது நடைபெற்ற ஒரு சம்பவம் இது.கல்லூரியின் ஆண்டுவிழா நடைபெற்று கொண்டிருந்தது.ஆண்டுவிழானா கேட்கனுமா பசங்கள் எல்லாம் ஜாலியா இருந்தாங்க.நானும் என் நண்பனும் கல்லூரியிலிருந்து கல்லூரி விடுதிக்கு சென்று கொண்டிருந்தோம்.நடந்து செல்கையில் விடுதியிலிருந்து நண்பன் ஒருவன் குட்டிகரணம் அடித்துக்கொண்டே எங்கள் எதிரே வந்தான்.நண்பன் அவனை நிறுத்தி என்னடா இப்படி வரனு கேட்டதும் அவன் சொன்னான் மாப்ளே நான் தண்ணி அடிச்சு இருக்கேன்,மப்பு ஏறி போச்சு அப்டி இப்டின்னு உளறிட்டு இருந்தான்.இந்த சமயத்தில் எங்கள் கல்லூரியின் ஆங்கில துறையில் பணிபுரியும் பேராசிரியர் எங்களிடம் வந்து விட்டார்.அவரை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.ஏனென்றால் அவர் மாணவர்களிடம் மிகவும் சகஜமா பழகுவார்.(நான் அவரு எல்லாம் சேர்ந்துதான் காதலுக்கு மரியாதை படத்துக்கு போனோம்னா பார்த்துகோங்க.அது பற்றி ஒரு தனி பதிவு இருக்கு. ).அவரும் வந்து அவன கேட்கவும் எங்கள்ட்ட சொன்னதையே அவற்றையும் சொன்னான்.சரி அப்படி என்னடா குடிச்சனு அவர் கேட்டார்.சார் நான் ஒரு கிளாஸ் பீர் குடிச்சேன் சார்னு சொன்னான் பாருங்க.கன்னத்துல்ல விட்டார் ஒரு அறை.அதுக்கு அப்புறம்தான் நடந்துச்சு அதிரடியே.அடிச்சுட்டு சொன்னார் அவரு நாயே ஒரு 1/2 அடிச்சுட்டு நானே பஸ் ஏறி வந்து இருக்கேன்,ஒரு கிளாஸ் பீர் எ குடிச்சுட்டு குட்டிகரணமா அடிக்குற ராஸ்கல் ரூம்ல போய் படுத்து தூங்கு.ஒரு கிளாஸ் பீர் அடிச்சுட்டு தண்ணி அடிகுறவன் மானத்த எல்லாம் வாங்குற.உன்ன ரூம விட்டு வெளியே பாத்தேன் அங்கனயே உன்ன கொன்னுருவேனு சொன்னாரு பாருங்க.எடுத்தான் அவன் ஓட்டம்.இன்னைக்கும் அந்த நண்பன பார்த்த எல்லாரும் அதை சொல்லி தான் கிண்டல் பண்ணுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment